மத்திய அமைச்சரின் பாராட்டு மழையில் நனைந்த கிராம அஞ்சல் ஊழியர்கள்
March 16, 2026

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய 10 கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு மத்திய இணையமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் விருதுகளை வழங்கினார். கிராமப்புற இந்தியாவின் இதயத் துடிப்பாக விளங்கும் அஞ்சல் ஊழியர்கள், வெயில் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் அரசு சேவைகளை வீடு வீடாகக் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பாலமாகத் திகழ்கின்றனர் என்று அவர் புகழாரம் சூட்டினார்.
தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அஞ்சல் துறையின் பார்சல் வருவாயைப் பெருக்க ஊழியர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். 2031-க்குள் இந்தச் சந்தை சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாயாக வளர வாய்ப்புள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது வருவாய் ஈட்டுவதில் தமிழக அஞ்சல் வட்டம் தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.