மதுரை வழியாக வேளாங்கண்ணி செல்ல புதிய ரயில் சேவை இதோ பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு

மதுரை வழியாக வேளாங்கண்ணி செல்ல புதிய ரயில் சேவை இதோ பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு

தெற்கு ரயில்வேயின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று எர்ணாகுளம் சந்திப்பு முதல் வேளாங்கண்ணி வரை புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை மார்ச் 18 முதல் தொடங்குகிறது. இந்த ரயில் ஒவ்வொரு புதன்கிழமை இரவு 11.50 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு மறுநாள் மாலை வேளாங்கண்ணி சென்றடையும்.

முக்கியமாக இந்த ரயில் மதுரை வழியாக இயக்கப்படுவது தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேளாங்கண்ணி செல்ல நேரடி வசதி இல்லாத குறையை இந்த நிரந்தர ரயில் சேவை தற்போது பூர்த்தி செய்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *