மஞ்சுவாரியர் ஸ்டைலிஷ் லுக்கில் கவர்ச்சி: ‘எம்புரான்’ பட விழாவில் ரசிகர்கள் ஷாக்!
March 21, 2025

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் எதிர்பார்ப்பை எழுப்பிய நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல நடிகை மஞ்சுவாரியர், தனது ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கோட் அணிந்து மிடுக்காக காணப்பட்ட மஞ்சுவாரியரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அவரின் இந்த புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் புதிய பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.