மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி உறுதி

மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி உறுதி

மத்திய பட்ஜெட்டிற்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் மோடி, கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். குறிப்பாக, ஆயுஷ்மான் பாரத் திட்டம் கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முதியோர் பராமரிப்புக்கான ‘கேர் கிவர்’களின் தேவை இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதால் அதற்கான சிறப்புப் பயிற்சி மாதிரிகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கல்வி முறையை நிஜ உலகப் பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றார். யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் உலகளாவிய அங்கீகாரம் இந்தியாவின் சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்துவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *