மக்களவையில் இ-சிகரெட் பிடித்தாரா கீர்த்தி ஆசாத்? பாஜகவின் குற்றச்சாட்டால் அரசியல் பரபரப்பு

மக்களவையில் இ-சிகரெட் பிடித்தாரா கீர்த்தி ஆசாத்? பாஜகவின் குற்றச்சாட்டால் அரசியல் பரபரப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத் மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்தியதாக பாஜக தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட பாஜக, நாடாளுமன்ற விதிகளை மீறிய இந்தச் செயல் ஏற்க முடியாதது என்று கூறியுள்ளதுடன், இது குறித்து மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள திரிணாமுல் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, பாஜக முழுமையான வீடியோ ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். வெறும் ஐந்து வினாடி வீடியோவை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், விதிமீறல் நிரூபிக்கப்பட்டால் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *