மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பெறுவது எப்படி?

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விரிவாக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஏற்கனவே தவறவிட்ட குடும்பத் தலைவிகள் மே 29ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் வழக்கம் போல் ரேஷன் கடைகளில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலாக, மக்கள் நேரடியாக விண்ணப்பங்களைப் பெறும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய முறையின் மூலம், ரேஷன் கடைகளை நாடாமல் நேரடியாக மக்களுக்கு விண்ணப்பங்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் குடும்பத் தலைவிகள், அரசு அலுவலகங்கள் அல்லது திட்டம் அமல்படுத்தப்படும் மையங்களில் இருந்து விண்ணப்பங்களைப் பெற முடியும். மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் மூலம் மேலும் பலர் அரசின் நலத்திட்டம் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.