மகன் உயிரிழக்க அனுமதி கோரிய பெற்றோரின் கண்ணீர் மனுவும் உச்ச நீதிமன்றத்தின் உருக்கமான தீர்ப்பும்
March 11, 2026

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது ஹரீஷ் ராணா கடந்த 13 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உயிருக்குப் போராடி வருகிறார். 2013-ல் விடுதி மாடியிலிருந்து விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு குழாய் மூலம் உணவு மற்றும் சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. மகனின் நிலையைக் கண்டு துடித்த வயதான பெற்றோர் அவருக்குக் கருணைக்கொலை செய்ய அனுமதி கோரினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு உருக்கமான தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பின் போது நீதிபதி பர்திவாலா கண்கலங்கியது அங்கிருந்தோரை நெகிழ வைத்தது. மனிதாபிமான அடிப்படையில் ஹரீஷ் ராணாவின் நிலையை கருத்தில் கொண்டு அவருக்குக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.