போலீஸ் அதிகாரியின் வினோத செயல், வெள்ள நீரில் ‘கங்கா பூஜை’

போலீஸ் அதிகாரியின் வினோத செயல், வெள்ள நீரில் ‘கங்கா பூஜை’

உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜில் ஒரு போலீஸ் அதிகாரி வெள்ளத்தில் மூழ்கிய தனது வீட்டில் பூஜை செய்த வினோத செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனமழையால் அவரது வீடு வெள்ள நீரில் மூழ்கியிருந்த போதிலும், இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு அவர் பூஜை செய்தார். இது சாதாரண வெள்ள நீர் அல்ல, சாட்சாத் கங்கை தேவியே தன் வீட்டிற்கு வந்திருப்பதாக அவர் கூறினார்.

View this post on Instagram

A post shared by SI ChandraDeep Nishad (@si_chandradeep_nishad)

சந்திரதீப் நிஷாத் என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி, தனது சீருடையில் வெள்ள நீரில் பூக்களையும் பாலையும் வைத்து வழிபாடு செய்தார். சமூக வலைதளங்களில் அவர், “கங்கை தாயார் என் வீட்டிற்கு வந்திருக்கிறார், நான் அவளது ஆசீர்வாதத்தை நாடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த செயலுக்கு இணையத்தில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *