போர் மேகங்கள் சூழ்ந்த ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய எழுபது இந்திய மாணவர்கள்

ஈரானில் சிக்கித் தவித்த 70 இந்திய மாணவர்கள் மத்திய அரசின் துரித நடவடிக்கையால் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். வான்வழிப் போக்குவரத்து முடங்கியதால், அவர்கள் பேருந்து மூலம் ஆர்மீனியா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் புது தில்லி வந்தடைந்தனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி வந்தடைந்த மாணவர்கள் சிறப்புப் பேருந்துகள் மூலம் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரானின் டெஹ்ரான் மற்றும் கோம் நகரங்களில் இன்னும் பல இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் மேலும் பல சிறப்பு விமானங்கள் மூலம் எஞ்சிய இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.