போர் பதற்றத்திலும் தங்கம் விலை குறைய இதுதான் உண்மையான காரணம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையிலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை எதிர்பாராத விதமாக சரிந்து வருகிறது. பொதுவாக போர் காலங்களில் தங்கம் விலை உயரும் என்ற விதியை உடைத்து, கடந்த சில நாட்களில் சவரனுக்கு ஆயிரக்கணக்கில் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளதும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித மாற்றங்களுமே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று லாபம் ஈட்டுவதும், வட்டி தரும் வங்கி பத்திரங்களில் முதலீடு செய்வதும் தங்கம் விலையை கட்டுக்குள் வைத்துள்ளது. மேலும் இந்த போர் சூழலை சந்தை ஏற்கனவே கணித்துவிட்டதால் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் போர் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தால், தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.