போர் பதற்றத்தால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

போர் பதற்றத்தால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் பாதுகாப்பு கருதி இதுவரை 4,335 இந்திய விமானங்கள் மற்றும் 1,187 வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வான்வெளிப்பகுதி போர்க்களமாக மாறியுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்கே தங்களது அமைச்சகம் முதலிடம் அளிப்பதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் சுமார் 2.19 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். தற்போதைய நிலவரத்தை டிஜிசிஏ (DGCA) தீவிரமாக கண்காணித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வான்வெளிப்பகுதி முழுமையாக பாதுகாப்பானதாக மாறும் வரை விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *