போர் சூழலால் இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டினருக்கு மத்திய அரசு வழங்கும் அதிரடி சலுகை

போர் சூழலால் இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டினருக்கு மத்திய அரசு வழங்கும் அதிரடி சலுகை

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினருக்கு இந்திய அரசு மிகப்பெரிய நிவாரணத்தை அறிவித்துள்ளது. தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இவர்களின் விசா காலம் கட்டணமின்றி மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படும். பிப்ரவரி 28, 2026-க்குப் பிறகு இந்தியாவில் தங்கியுள்ளவர்களிடம் கூடுதல் காலதாமதத்திற்காக எந்த அபராதமும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் இந்த சலுகையை அந்தந்த மண்டல வெளிநாட்டினர் பதிவு அலுவலகங்கள் (FRRO) செயல்படுத்தும். அவசர நிலை காரணமாக இந்தியாவுக்கு திருப்பி விடப்படும் பயணிகளுக்கு தற்காலிக தரையிறங்கும் அனுமதி இலவசமாக வழங்கப்படும். தற்போதைய அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, கூடுதல் காலம் தங்குவது குடிவரவு சட்டத்தை மீறியதாகக் கருதப்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *