போதைப்பொருள் மன்னன் எல் மென்சோ மரணம் மற்றும் மெக்ஸிகோவில் வெடித்த வன்முறையில் 25 வீரர்கள் பலி

போதைப்பொருள் மன்னன் எல் மென்சோ மரணம் மற்றும் மெக்ஸிகோவில் வெடித்த வன்முறையில் 25 வீரர்கள் பலி

குறுநில போதைப்பொருள் மன்னன் நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ் என்ற ‘எல் மென்சோ’ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மெக்ஸிகோவின் மேற்குப் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் பேரில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் வீழ்த்தப்பட்டதால், ஆத்திரமடைந்த கடத்தல் கும்பல் நாடு முழுவதும் தீவைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது. நிலமையை கட்டுப்படுத்த நிர்வாகம் 11,000 ராணுவ வீரர்களை அங்கு குவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 25 வீரர்களும் 30 போராட்டக்காரர்களும் உயிரிழந்துள்ளனர். வன்முறை தீவிரமடைந்துள்ளதால், இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில், அதிபர் கிளாடியா ஷீன்பாம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *