பெற்றோரை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன் கைது
December 18, 2025

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் அருகே பணத்தகராறு காரணமாக பெற்ற தாய் மற்றும் தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த மகன் அம்பேஷ் குமார் கைது செய்யப்பட்டார். வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த அவர், கனமான இரும்பு கம்பியால் தாக்கி இருவரையும் கொன்றுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஜாப்ராபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்த பிறகு ஆதாரங்களை மறைப்பதற்காக, உடல்களை கட்டர் மூலம் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்துள்ளார். பின்னர் அவற்றை தனது காரில் எடுத்துச் சென்று கோமதி ஆற்றில் வீசியுள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.