பெர்முடா முக்கோண மர்மம் விலகுமா? கடலுக்கு அடியில் 20 கி.மீ. அகல ராட்சத பாறை அமைப்பு கண்டுபிடிப்பு

பெர்முடா முக்கோண மர்மம் விலகுமா? கடலுக்கு அடியில் 20 கி.மீ. அகல ராட்சத பாறை அமைப்பு கண்டுபிடிப்பு

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள மர்மமான பெர்முடா முக்கோணப் பகுதிக்கு அடியில் பிரமாண்டமான நிலவியல் அமைப்பு ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அண்மைய ஆய்வில், மியாமி, பெர்முடா மற்றும் போர்ட்டோ ரிக்கோவுக்கு இடைப்பட்ட பகுதியில் 20 கி.மீ. அகலமுள்ள அசாதாரணமான ‘ராஃப்ட்’ போன்ற அடுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உலகின் வேறு எந்தப் பகுதியிலும் கடலின் மேலோட்டுக்குக் கீழே காணப்படாத ஒரு அடுக்கு என்று கூறப்படுகிறது.

சுமார் 31 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பின்போது, பூமியின் அடிப்பகுதியில் உள்ள மாண்டிலின் ஒரு பகுதி உறைந்து இந்த வித்தியாசமான அமைப்பை உருவாக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த அடுக்கே அப்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மர்மமான முறையில் காணாமல் போவதற்கான நூற்றாண்டுப் பழமையான மர்மத்தைத் தீர்க்க உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *