பெரம்பூரில் போட்டியிடுகிறாரா விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஜாலியாக பேசி சஸ்பென்ஸை உடைத்தார் தளபதி

பெரம்பூரில் போட்டியிடுகிறாரா விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஜாலியாக பேசி சஸ்பென்ஸை உடைத்தார் தளபதி

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பனையூரில் நடைபெற்ற முதற்கட்ட வேட்பாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுடன் உற்சாகமாக உரையாடினார். அப்போது பெரம்பூர் தொகுதி நிர்வாகிகளிடம் “நான் பெரம்பூருக்கு வரலாமாப்பா?” என அவர் கேட்ட கேள்வி, அவர் அங்கேயே போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மக்களைச் சந்தித்து தைரியமாகப் பணியாற்ற வேட்பாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

விஜய்யின் வருகையைத் திருவிழாவாகக் கொண்டாடி வெற்றி பெற வைப்போம் என நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் கூறினர். தன் மீதான அன்பைக் கண்டு மகிழ்ச்சியடைந்த விஜய், விரைவில் தொகுதிக்கு வருவதாக உறுதியளித்துள்ளார். வட சென்னை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு, தவெக தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை விதைத்துள்ளது. விஜய் போட்டியிடுவது உறுதியானால் தேர்தல் களம் கூடுதல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *