பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை உயர் போலீஸ் அதிகாரி கைது

கோவை புதூர் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் கமாண்டர் செந்தில்குமார், அங்கு பணிபுரியும் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையைத் தொடர்ந்து, போலீஸ் சூப்பரண்டெண்ட் அந்தஸ்தில் உள்ள அவர் கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், போத்தனூர் அனைத்து மகளிர் போலீசார் அவரை தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் தலைமையகத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரி ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.