பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை உயர்மட்ட போலீஸ் அதிகாரி அதிரடி கைது

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை உயர்மட்ட போலீஸ் அதிகாரி அதிரடி கைது

கோவைப்புதூர் தமிழ்நாடு 4வது பட்டாலியன் கமாண்டன்ட் செந்தில்குமார் பெண் காவலர்களுக்கு பாலியல் ரீதியாக அத்துமீறல் மற்றும் மிரட்டல் விடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இவர் மீது மகளிர் போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீவிர விசாரணைக்கு பிறகு அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழக காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தகுந்த தண்டனை வழங்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *