பெண்களை இழிவுபடுத்திய பொன்ராஜிற்கு ஆதரவு தெரிவித்து சீமான் அதிரடி பேச்சு

தவெக பெண் தொண்டர்களை அவதூறாக விமர்சித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமியின் கருத்திற்கு தமிழக அரசியலில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தில் விஜய் நேரில் புகார் அளித்துள்ள நிலையில், பொன்ராஜ் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மறுத்து வருகிறார். சமூக வலைதளங்களில் பொன்ராஜிற்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வரும் சூழலில், இந்த விவகாரம் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் பொன்ராஜின் பேச்சு தவறில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பொன்ராஜ் சமூக அக்கறையுடனும் ஆதங்கத்துடனும் தான் அவ்வாறு பேசியதாக சீமான் குறிப்பிட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் கருத்திற்கு சீமான் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.