பெங்களூரு பல்கலைக்கழக மாணவரை தீவிரவாதி என சாடிய பேராசிரியர் சிக்கினார்
March 28, 2026

பெங்களூரு பிஇஎஸ் பல்கலைக்கழக பேராசிரியர் முரளிதர் தேஷ்பாண்டே, வகுப்பறையில் ஒரு முஸ்லிம் மாணவரை ‘தீவிரவாதி’ என்று அழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வகுப்பிலிருந்து வெளியே செல்ல அனுமதி கேட்ட அந்த மாணவரை அவர் அவதூறாகப் பேசினார். மேலும், ஈரான் போருக்கு இவர்களே காரணம் என்றும், டொனால்ட் டிரம்ப் வந்து உங்களை அழைத்துச் செல்வார் என்றும் அவர் தரக்குறைவாகக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து மாணவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். என்எஸ்யுஐ (NSUI) அமைப்பின் புகாரைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் அந்தப் பேராசிரியரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. தற்போது இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.