பெங்களூரு உணவகத்தில் ஒரு கிளாஸ் ஜூஸிற்கு கேஸ் தட்டுப்பாடு கட்டணம் வசூல்
March 16, 2026

பெங்களூருவில் உள்ள தியோ கஃபேவில் லெமனேட் குடித்த வாடிக்கையாளர் ஒருவர், தனது பில்லைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இரண்டு கிளாஸ் ஜூஸிற்கு பானத்தின் விலையுடன் கூடுதலாக 5 சதவீத ‘கேஸ் தட்டுப்பாடு கட்டணம்’ விதிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை காரணம் காட்டி வசூலிக்கப்படும் இந்த வினோத கட்டணம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
வழக்கமாக உணவகங்களில் சேவை வரி அல்லது ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும் நிலையில், குளிர் பானத்திற்கு எரிவாயு கட்டணம் வசூலிப்பது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வால் ஏற்கனவே அவதிப்படும் மக்களுக்கு, இத்தகைய கூடுதல் கட்டணங்கள் பெரும் சுமையாக மாறியுள்ளன.