பெங்களூருவில் லிவ்-இன் பார்ட்னர் ரஞ்சிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் கைது
March 14, 2026

பெங்களூருவில் திருமணத்திற்கு அழுத்தம் கொடுத்த லிவ்-இன் பார்ட்னர் ரஞ்சிதாவை, கேபிள் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்த ஐயப்பா என்பவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே திருமணமான ஐயப்பா, விவாகரத்து கிடைக்காததால் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவர், ரஞ்சிதாவைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடியது அம்பலமானது.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரஞ்சிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவந்தது. உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல சித்தரிக்க முயன்ற ஐயப்பா, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.