பெங்களூரில் ஐபிஎல் 2026 தொடக்க விழா ரத்து பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவின் பின்னணி

கடந்த ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மார்ச் 28 அன்று நடைபெறவிருந்த பிரம்மாண்ட தொடக்க விழாவை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதும் முதல் போட்டியில் கலைநிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறாது என்று பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், மே 31 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் ஆர்சிபி அணி தனது 5 ஹோம் போட்டிகளை மட்டுமே பெங்களூரில் விளையாடும், மீதமுள்ள 2 போட்டிகள் ராய்ப்பூரில் நடைபெறும். கடந்த ஆண்டு ஏற்பட்ட அசம்பாவிதத்திற்குப் பிறகு கர்நாடக அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டிகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கம் கொண்டாட்டங்கள் இன்றி அமைதியாகத் தொடங்குகிறது.