புனே அடுக்குமாடி குடியிருப்பில் மின்தூக்கி கதவில் சிக்கிய குழந்தையின் கை வீடியோவால் பரபரப்பு

புனே திகி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்தூக்கி கதவின் இடுக்கில் குழந்தையின் கை சிக்கிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 7-ம் தேதி மாலை, இரு பெண்கள் குழந்தையுடன் மின்தூக்கியில் ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாக குழந்தையின் கை கதவு இடுக்கில் மாட்டிக்கொண்டது.
உடனடியாக அங்கிருந்த பயணிகள் கதவு மூடுவதைத் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குழந்தையின் கை காயமின்றி மீட்கப்பட்டது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை அடுத்து, அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கியைப் பயன்படுத்தும்போது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் விழிப்புணர்வு குறித்து புதிய கவலை எழுந்துள்ளது.
Child's hand gets stuck in elevator door in Pune. Locals rescued her pic.twitter.com/lbP5ilWOuu
— Lakshay Mehta (@lakshaymehta08) March 15, 2026