புதிய ரஃபேல் ஒப்பந்தத்திலும் பழைய ரேடார் தொழில்நுட்பமா? பிரான்ஸ் மீது இந்தியா கவலை

இந்திய விமானப்படை மேலும் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவை அனுப்பியுள்ளது. இருப்பினும், புதிய ஒப்பந்தத்திலும் பழைய ரேடார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் அது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தும். தற்போது இந்திய ரஃபேல் விமானங்களில் பயன்படுத்தப்படும் ரேடார், பழமையான கலியம் ஆர்சனைடு (GaAs) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது, இது நவீன போர்க்களத்தில் பலவீனமாக கருதப்படுகிறது.
இந்தியாவின் பல்நோக்கு போர் விமான திட்டத்திற்கான (MRFA) போட்டியில் உள்ள மற்ற போர் விமானங்கள் மேம்படுத்தப்பட்ட கலியம் நைட்ரைடு (GaN) ரேடார்களை பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம் அதிக தூரத்தில் இலக்குகளை கண்டறிவதற்கும், மின்னணு தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும் உதவுகிறது. இந்த தொழில்நுட்ப குறைபாட்டை சரிசெய்யாவிட்டால், சீனாவை போன்ற எதிரிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் போர் திறன் பாதிக்கப்படும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.