பிள்ளைகளின் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த தாய் கணவர் வெளியிட்ட பகீர் வீடியோ

தன்னுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் கணவனை தவிக்கவிட்டு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க வந்த ஆசிரியருடன் இல்லத்தரசி ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணீஷ் திவாரி என்பவர் தனது மனைவி ரோஷ்னி ராணி மற்றும் ஆசிரியர் சுபம் குமார் மேத்தா இடையேயான இந்த கள்ளத்தொடர்பு குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். பாடம் கற்பிக்க வீட்டிற்கு வந்த ஆசிரியர் குடும்பத்தின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வீட்டில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாத நிலையில் மனைவியின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக மணீஷ் தெரிவித்துள்ளார். மேலும் இனி தனது மனைவியை மீண்டும் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் அந்த வீடியோவில் உருக்கமாக கூறியுள்ளார். ஒரு ஆசிரியரே இப்படி குடும்பத்தை சீரழித்தது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.