பிறப்பு முதல் இறப்பு வரை வரி: பொதுமக்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கும் ‘வரி வலை’!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் சாமானிய மக்கள் வரிச் சுமையால் தத்தளித்து வருகின்றனர். பால், மருந்து முதல் ஊதுபத்தி வரை அனைத்திற்கும் வரி செலுத்த வேண்டியுள்ளதைச் சுட்டிக்காட்டி, மத்திய பட்ஜெட் என்பது ‘ஆயுட்கால வரி வலை’ என நாடாளுமன்றத்தில் அபிஷேக் பானர்ஜி கடுமையாகச் சாடினார்.
நடுத்தர மக்களின் பணத்தைச் சுரண்டி ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நலன் காக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த ‘ராபின்ஹுட் மாடல்’ சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், வங்காளத்திற்கான நிலுவைத் தொகையை வழங்காதது வளர்ச்சிப் பணிகளை முடக்கியுள்ளதாகத் தெரிவித்தார். விவசாயிகள் பிரச்சனை மற்றும் பெண்கள் பாதுகாப்பு என அனைத்திலும் மத்திய அரசு பொதுமக்களைப் புறக்கணிப்பதாகக் கூறிய அவர், இதற்கு மக்கள் தேர்தலில் உரிய பதிலடி கொடுப்பார்கள் என எச்சரித்தார்.
இந்த வரிச் சுமையிலிருந்து தங்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பதே தற்போதைய சாமானிய மக்களின் கேள்வியாக உள்ளது.