பிரேசில் கால்பந்து மைதானத்தில் மோதல் வெடித்ததில் 23 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காட்டி நடுவர் அதிரடி

பிரேசில் கால்பந்து மைதானத்தில் மோதல் வெடித்ததில் 23 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காட்டி நடுவர் அதிரடி

மினிரோ சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் குரூஸிரோ மற்றும் அத்லெடிகோ மினிரோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் போர்க்களமாக மாறியது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், நடுவர் மத்தியாஸ் டெல்கடோ மொத்தம் 23 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.

போட்டியின் முடிவில் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்டதற்காக இரு அணிகளையும் சேர்ந்த 11 மற்றும் 12 வீரர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இது பிரேசில் கால்பந்து வரலாற்றில் ஒரு போட்டியில் வழங்கப்பட்ட அதிகபட்ச சிவப்பு அட்டையாகும். இருப்பினும், அர்ஜென்டினாவில் 36 பேருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்ட உலக சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *