பிரிட்டிஷ் அரசியலில் அதிரடி மாற்றம்? நாட்டின் முதல் முஸ்லிம் பிரதமர் ஆவாரா ஷபானா மஹ்மூத்!

பிரிட்டன் அரசியலில் தற்போது பெரும் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வரும் சூழலில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கிவிட்டது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் சர்ச்சை மற்றும் பீட்டர் மண்டல்சனை தூதராக நியமித்த விவகாரம், ஸ்டார்மருக்கு எதிராக அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த அரசியல் நெருக்கடியால் ஸ்டார்மர் பதவி விலக நேரிட்டால், அந்த இடத்திற்கு தற்போதைய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அவர் பிரதமராகப் பொறுப்பேற்றால், பிரிட்டன் வரலாற்றிலேயே முதல் முஸ்லிம் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுவார். நாட்டின் ஆட்சி அதிகாரத்திலும் சமூக அமைப்பிலும் இந்த மாற்றம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கி வருகிறது.