பார்வையைப் பறிக்கும் மௌனக் கொலையாளி குளுக்கோமா பாதிப்பிலிருந்து தப்பிக்க வழிகள்

குளுக்கோமா என்பது கண்ணின் உள் அழுத்தத்தை அதிகரித்து பார்வைத்திறனைப் பாதிக்கும் ஒரு தீவிர நோயாகும். ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியாததால் இது மௌனக் கொலையாளி என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை குறைதல், கண் வலி, தலைவலி மற்றும் மங்கலான பார்வை போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். குறிப்பாக ஒளியைச் சுற்றி வளையங்கள் தெரிவது மற்றும் பக்கவாட்டுப் பார்வை மறைவது குளுக்கோமாவின் ஆபத்தான எச்சரிக்கை அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் அல்லது குடும்பத்தில் குளுக்கோமா பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்நோய் வரும் அபாயம் அதிகம். எனவே 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் முறையான கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சொட்டு மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை மூலம் பார் இழப்பைத் தடுக்க முடியும். விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலமே இந்தத் தீவிர பாதிப்பிலிருந்து நமது கண்களைப் பாதுகாக்க இயலும்.