பாரசீக வளைகுடாவில் சிக்கிய 22 இந்தியக் கப்பல்கள் மற்றும் 600 மாலுமிகளின் கதி என்ன

பாரசீக வளைகுடாவில் சிக்கிய 22 இந்தியக் கப்பல்கள் மற்றும் 600 மாலுமிகளின் கதி என்ன

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால், ஹார்முஸ் ஜலசந்தியில் 22 இந்தியக் கப்பல்கள் வெளியேற முடியாமல் முடங்கியுள்ளன. இந்த கப்பல்களில் தவிக்கும் சுமார் 611 இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது. இதில் 6 எல்பிஜி மற்றும் 4 கச்சா எண்ணெய் கப்பல்கள் அடங்கும். இதனால் இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் நடத்திய தீவிர பேச்சுவார்த்தையின் பலனாக, ஈரான் அரசு இரண்டு இந்திய எல்பிஜி கப்பல்களுக்கு மட்டும் விதிவிலக்காக அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 92,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய கப்பல்கள் இந்தியா நோக்கிப் புறப்பட்டுள்ளன. எஞ்சிய கப்பல்களையும் மாலுமிகளையும் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு தொடர்ந்து தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *