பாப் எல் மண்டேப் நீரிணையை மூட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திட்டம் மேற்கொள்வதால் உலக வர்த்தகத்தில் கடும் நெருக்கடி

பாப் எல் மண்டேப் நீரிணையை மூட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திட்டம் மேற்கொள்வதால் உலக வர்த்தகத்தில் கடும் நெருக்கடி

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், தற்போது பாப் எல் மண்டேப் நீரிணையை மூடப்போவதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். செங்கடல் வழியாக சூயஸ் கால்வாயை இணைக்கும் இந்த முக்கிய கடல்வழிப்பாதை மூடப்பட்டால், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

உலகளாவிய கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் முப்பது சதவீத பங்களிப்பை வழங்கும் இந்த இரு நீரிணைகளும் முடக்கப்படுவது சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சௌதி அரேபியா மாற்றுப் பாதையாக பயன்படுத்தி வரும் இந்த நீரிணையை ஹவுதிகள் குறிவைப்பது, போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவான இந்த அதிரடி முடிவு உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *