பான் கார்டு இன்றி பல கோடி சொத்து பரிமாற்றம் செய்த நொய்டா அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

நொய்டாவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 3,035 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான பணப்பரிமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல சொத்து பதிவுகளின் போது கட்டாயமான பான் கார்டு விவரங்கள் தவறாகவோ அல்லது முழுமையாக தவிர்க்கப்பட்டோ இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் முறைகேடுகள் சரி செய்யப்படாததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது முக்கிய டிஜிட்டல் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வரி ஏய்ப்பிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கான்பூரைத் தொடர்ந்து நொய்டாவிலும் இத்தகைய முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மற்ற அலுவலகங்களிலும் ஆய்வுகளை விரிவுபடுத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.