பான் கார்டு இன்றி கோடி கணக்கில் சொத்து பரிவர்த்தனை செய்த நொய்டா துணை பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி வேட்டை

பான் கார்டு இன்றி கோடி கணக்கில் சொத்து பரிவர்த்தனை செய்த நொய்டா துணை பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி வேட்டை

நொய்டா துணை பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சுமார் 3,035 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. பல சொத்து பதிவுகளின் போது கட்டாயமான பான் கார்டு விவரங்கள் தவறாகவோ அல்லது முழுமையாக தவிர்க்கப்பட்டோ இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் முறைகேடுகள் சரி செய்யப்படாததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பிற்கு உதவிய அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கான்பூரைத் தொடர்ந்து நொய்டாவிலும் இத்தகைய முறைகேடு அம்பலமானது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *