பாதாம் பிசின் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா?
March 26, 2025

கோடைக்காலத்தில் சர்பத், ஜூஸ் போன்ற குளிர்பானங்களில் பாதாம் பிசினை சேர்த்து குடிப்பது உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியை அளிக்க உதவுகிறது. வடமாநிலங்களில், பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு கோந்து லட்டு வழங்குவது வழக்கம். இது பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் உடல் வலிமை பெறவும், தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பாதாம் பிசின் பொதுவாக அனைத்து வயது மக்களும் எடுத்துக்கொள்ளக்கூடியது. ஆனால் சளி, வீஸிங் (மூச்சுக்குறைவு) போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்படக்கூடிய குழந்தைகளுக்கு பாதாம் பிசினை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. இது போன்ற பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு பாதாம் பிசின் சில நேரங்களில் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, குழந்தைகளுக்கு பாதாம் பிசினை வழங்கும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.