பாஜக கூட்டணியை அதிரடியாக மறுத்த விஜய் தமிழக அரசியலில் புதிய திருப்பம்

தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக வெளியான தகவல்களை அக்கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. துணை முதல்வர் பதவி உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் முன்வைக்கப்பட்ட நிலையிலும், கொள்கை ரீதியான காரணங்களுக்காக விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்த பிறகு, அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என விஜய் கருதுகிறார். நிர்வாகிகளின் ஆலோசனையின்படி, இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் தனித்துப் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். அதிமுக பலவீனமடையும் பட்சத்தில், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுப்பதே விஜய்யின் தற்போதைய திட்டமாக உள்ளது.