பாஜக கூட்டணியில் விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? அண்ணாமலை அதிரடி விளக்கம்

பாஜக கூட்டணியில் விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? அண்ணாமலை அதிரடி விளக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக-பாஜக கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இணையப்போவதாகவும், அவருக்கு 80 இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, விஜய்யுடன் இது போன்ற பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள கருத்தே இறுதியானது என்றும், திமுகவினர் தேவையற்ற பதற்றத்தில் இத்தகைய வதந்திகளைப் பரப்புவதாகவும் அவர் விமர்சித்தார். திருமாவளவன் போன்ற தலைவர்கள் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். தவெக தரப்பிலும் இந்தத் தகவல்கள் ஏற்கனவே மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *