பாஜகவை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் நிர்மலா பெரியசாமி அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, பாஜகவை கையாள்வதில் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அனுபவம் கொண்டவர் என்று கூறினார். தேர்தல் கூட்டணி என்பது வேறு, கட்சியின் கொள்கை என்பது வேறு என்பதை அவர் தெளிவுபடுத்தினார். சிறுபான்மையினரை பாதுகாப்பதாக கூறுபவர்கள் மக்களை ஏமாற்றுவதாகவும், அதிமுகவே உண்மையான பாதுகாவலன் என்றும் அவர் மேடையில் முழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் சமீபத்திய செயல்பாடுகளைப் பார்த்து அவரது கட்சி நிர்வாகிகளே பயத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார். விஜய்யின் பேச்சுகள் மற்றும் நடத்தையை சுட்டிக்காட்டிய நிர்மலா பெரியசாமி, பெண்களை காப்பதாக கூறுபவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை சரியாக கவனிக்க வேண்டும் என்று தாக்கிப் பேசினார்.