பாஜகவுடன் கைகோர்க்கிறாரா விஜய் அதிரடி திருப்பங்களால் தமிழக அரசியலில் பரபரப்பு

பாஜகவுடன் கைகோர்க்கிறாரா விஜய் அதிரடி திருப்பங்களால் தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் என்டிஏ கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் செலவினங்களை கருத்தில் கொண்டும், அரசியல் ரீதியாகவும் தனித்துப் போட்டியிடுவதை விட கூட்டணியே சிறந்தது என நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் விஜய் டெல்லி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாஜக தலைவர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், கட்சித் தரப்பில் அது மறுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டணி உறுதியானால் தவெக 50 தொகுதிகளையும் துணை முதல்வர் பதவியையும் கோர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கொள்கை எதிரி என்று விமர்சித்த பாஜகவுடன் விஜய் கூட்டணி வைப்பாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *