பாகவதருடன் விருந்து: காங்கிரஸை விளாசிய அத்னான் சாமி!

பாகவதருடன் விருந்து: காங்கிரஸை விளாசிய அத்னான் சாமி!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவதருடன் பாடகர் அத்னான் சாமி இரவு விருந்து சாப்பிட்ட புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2016-ல் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து குடியுரிமை பெற்ற அத்னான் சாமியை, மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி ‘துரோகி’ என கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள அத்னான் சாமி, தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் நேரு காலத்து அரசியலைச் சுட்டிக்காட்டி காங்கிரஸைத் தீயாக விமர்சித்துள்ளார். “கலைஞர்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்” எனத் தெரிவித்துள்ள அவர், அடுத்தடுத்து இரண்டு பதிவுகள் மூலம் காங்கிரஸின் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *