பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு

பஹ்ரைனில் அமெரிக்க துருப்புக்கள் தங்கியிருந்த விடுதி மீது ஈரான் அதிரடியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 11 நாட்களாக நீடித்து வரும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலுக்கு மத்தியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் பெரும் பாதிப்பு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் உத்திகள் தோல்வியடைந்துவிட்டதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அவர்கள் இலக்கின்றி குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் எரிசக்தி கட்டமைப்பில் அமெரிக்கா தலையிடுவதால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பஹ்ரைன் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.