பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம் நேர்மையுடன் ஒப்படைத்த வியாபாரியின் நெகிழ்ச்சி செயல்

பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம் நேர்மையுடன் ஒப்படைத்த வியாபாரியின் நெகிழ்ச்சி செயல்

பழைய துணி வியாபாரி செந்தில்குமார் தரம் பிரிக்கும் போது ஒரு புடவைக்குள் 12 சவரன் தங்க நகைகள் இருந்ததை கண்டெடுத்தார். உடனடியாக சிறுமுகை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அவரது நேர்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விசாரணையில் அந்த நகைகள் சுதா என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவரது தாய் தெரியாமல் துணியுடன் வைத்ததும் உறுதியானது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன. பேராசை இன்றி செயல்பட்ட செந்தில்குமாரின் இந்த உயர்ந்த பண்பை காவல்துறையினரும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *