பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் ஈஷாவின் கல்வி உதவித்தொகை திட்டம்

பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் ஈஷாவின் கல்வி உதவித்தொகை திட்டம்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ‘சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை’ வழங்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் சிங்கபதி மற்றும் சாடிவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பயன்பெற்றுள்ளனர்.

கல்வி உதவித்தொகையுடன் ஆங்கிலப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்களையும் ஈஷா இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பி.எஸ்.ஜி மற்றும் ராமகிருஷ்ணா போன்ற முன்னணி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தற்போது பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பொறியாளர்களாகவும் கணக்காளர்களாகவும் பணியாற்றி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *