பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு அருகில் இறைச்சி விற்பனை செய்ய பீகார் அரசு அதிரடி தடை

பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு அருகில் இறைச்சி விற்பனை செய்ய பீகார் அரசு அதிரடி தடை

கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனை செய்ய பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா தடை விதித்துள்ளார். தூய்மையைப் பராமரிக்கவும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விதிகளை மீறுவோர் மீது நகராட்சி சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இறைச்சி விற்பனையாளர்களுக்கு மாற்று இடங்களை ஒதுக்காமல் இந்த தடையை அமல்படுத்துவது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என அவர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் கல்விச் சூழலைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *