பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் சின்னம்மை பாதிப்பு சாதாரண தடிப்புகளா அல்லது தொற்றா என்பதை இந்த அறிகுறிகள் மூலம் கண்டறியுங்கள்

பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் சின்னம்மை பாதிப்பு சாதாரண தடிப்புகளா அல்லது தொற்றா என்பதை இந்த அறிகுறிகள் மூலம் கண்டறியுங்கள்

தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் சின்னம்மைக்கு காரணமான வேரிசெல்லா ஜோஸ்டர் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது தும்மல், இருமல் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். ஆரம்பத்தில் காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், அடுத்த 10 முதல் 20 நாட்களில் உடலில் நீர் நிறைந்த சிறிய கொப்புளங்கள் தோன்றும். சாதாரண தடிப்புகளுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு காய்ச்சலின் தீவிரம் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தோன்றும் கொப்புளங்கள் ஆகும்.

தொற்று உறுதி செய்யப்பட்டால் நோயாளியை உடனடியாக தனிமைப்படுத்துவது அவசியம், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும். இந்த காலத்தில் அறையை காற்றோட்டமாக வைத்திருப்பதோடு, அதிகப்படியான நீர் அருந்துதல் மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், உடலில் ஏதேனும் அசாதாரண தடிப்புகள் அல்லது நீடித்த காய்ச்சல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *