பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடாக்கலாமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆபத்துகள்

பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடாக்கலாமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆபத்துகள்

வடை, பஜ்ஜி, சமோசா போன்ற பலகாரங்களைச் செய்தபின் மீந்துபோகும் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு பேராபத்தாக அமையலாம். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடாக்கும்போது, உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும். இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் பல்வேறு அழற்சியை (Inflammation) உண்டாக்குவதுடன், ஆரோக்கியமான செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இது சில சமயங்களில் புற்றுநோய்க்குக் (Carcinogenic) கூட காரணமாகலாம்.

மீண்டும் மீண்டும் உபயோகித்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி மட்டுமல்லாமல், இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய்கள் உண்டாகலாம். மேலும், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பு மண்டலம் தொடர்பான பல்வேறு தீவிர உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, ஆழமாக பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே சிறந்த வழி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *