பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவின் புதிய வியூகம் பிரஹார் அதிரடி திட்டம் தயார்

இந்திய உள்துறை அமைச்சகம் பயங்கரவாதத்திற்கு எதிராக ‘பிரஹார்’ எனும் புதிய தேசியக் கொள்கையை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் இணைக்காமல், ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ அடிப்படையில் செயல்படுவதே இதன் நோக்கம். குறிப்பாக ட்ரோன் தாக்குதல்கள், டார்க் வெப் மற்றும் கிரிப்டோ கரன்சி மூலமான நிதி பரிமாற்றங்களை முறியடிக்க அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியா இந்த திட்டத்தின் மூலம் பயன்படுத்துகிறது.
இந்த புதிய கொள்கையின்கீழ் உளவு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் என்.எஸ்.ஜி படையினரின் திறன் மேம்படுத்தப்படும். காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில், என்.ஐ.ஏ அமைப்பின் 94 சதவீத தண்டனை விகிதத்தை மேலும் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்களை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல், சமூகத் தலைவர்கள் மூலம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதைக்கு செல்வதைத் தடுக்கவும் ‘பிரஹார்’ முக்கியத்துவம் அளிக்கிறது.