பத்து நாள் படப்பிடிப்பிற்கு 150 கோடி சம்பளம் வாங்கி இந்திய திரையுலகில் சாதனை படைத்தார் கமல் ஹாசன்
March 10, 2026

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் கமல் ஹாசன் தற்போது நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இயக்குனர் நாக் அஸ்வினின் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் ‘சுப்ரீம் யாஸ்கின்’ கதாபாத்திரத்தில் நடிக்க வெறும் 10 நாட்களுக்கு அவர் 150 கோடி ரூபாய் பெற்றுள்ளார். தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் ஒரு நாள் படப்பிடிப்பிற்கு சுமார் 15 கோடி ரூபாய் பெற்று அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் ஹாசன் மீண்டும் உச்சத்திற்கு வந்துள்ளார். தற்போது ‘கல்கி’ இரண்டாம் பாகம் மற்றும் ரஜினிகாந்துடனான புதிய கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.