பச்சை முட்டை சாப்பிடும் பழக்கத்தால் உடலில் ஏற்படும் பயங்கர ஆபத்து
March 10, 2026

உடனடி ஆற்றலுக்காக பச்சை முட்டை சாப்பிடும் பழக்கம் கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதில் உள்ள சால்மோனெல்லா பாக்டீரியா கடுமையான உணவு நச்சுகளை உருவாக்குகிறது. மேலும் இதிலுள்ள அவிடின் புரதம் உடலில் பயோட்டின் சத்து உறிஞ்சப்படுவதை தடுத்து செரிமான கோளாறுகளை உண்டாக்கும்.
வயிற்று வலி, வாந்தி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது தொற்று பாதிப்பின் அறிகுறியாகும். எனவே முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை முழுமையாக வேகவைத்து உண்பதே பாதுகாப்பானது. முட்டையை கையாண்ட பிறகு கைகளையும் பாத்திரங்களையும் சோப்பு கொண்டு சுத்தப்படுத்துவது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.