நேபாள ஆன்மீக பயணத்தில் நேர்ந்த கோர விபத்து பொள்ளாச்சி தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு
March 15, 2026

பொள்ளாச்சியைச் சேர்ந்த முத்துக்குமார், அவரது மனைவி மீனா மற்றும் பாபு ஆகியோர் நேபாளத்தில் உள்ள மனகாமனா கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் சென்றனர். தரிசனம் முடிந்து திரும்பும்போது, அவர்கள் சென்ற வாகனம் காந்தர் மலைப்பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயரச் செய்தியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.